2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு
http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx
2009 சென்னைப் புத்தகத்திருவிழா
கடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளோம்.
2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்
முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.
வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
எளிமை, தெளிவு, உறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்குகாக 2005 செப்டம்பரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழான "வடக்கு வாசல்" நான்காம் ஆண்டு துவக்க விழாவை 2008.09.14 அன்று புது டெல்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.
இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் பிரதம ஆலோசகரான ய.சு.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவில் வடக்கு வாசல் இதழின் இணையதளம் http://www.vadakkuvaasal.com தொடங்கப்பட்டதுடன். "வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008" உம் வெளியிடப்பட்டது. 124 பக்கங்களுடன் கூடிய இலக்கிய மலரின் விலை In Rs 50.00 ஆகும். இச்சிறப்பு மலரை பெற விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் தொடர்கு கொள்ளவும். மேலதிக தகவல்களை http://www.vadakkuvaasal.com/eidhal.php என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளவும்.
Vadakku Vaasal Publications
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar,
Karol Bagh
New Delhi-110 005.
Telefax- 011-25815476
Phone: (+91)11-65858656
Mobile: (+91) 9211310455
e-mail: vadakkuvaasal@gmail.com
வடக்கு வாசல் இதழின் முந்தைய வெளியீடுகளின் உள்ளடக்கம் விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு
புத்தக வெளியீடு
அழைப்பிதழில் இருந்து.....
வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர்.
உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது.
முன்னுரையிலிருந்து.....
சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ......
- ஜோதிபாசு
500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும்.
தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்
தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு
பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்
421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,
சென்னை 600021
மின் அஞ்சல் ; thamizhbooks@gmail.com
தொலைபேசி ; 044 - 24332424
உலக வலைப்பதிவாளர்கள் தினம் - 2008
உலக வலைப்பதிவாளர்கள் தினத்தில் தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
நான் வாசிக்கும் புதிய 5 வலைப்பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துகிறேன்.
1.http://venkatramanan.wiki.zoho.com
2.http://sqlspot.blogspot.com
3.http://rpsubrabharathimanian.blogspot.com
4.http://yesudas.rs.googlepages.com
5.http://olaichuvadi.blogspot.com
கடந்த காலங்களில் தமிழ் வலைப்பதிவு உலகில் சிறப்பாக/கலகலப்பாக இயங்கிய மதி கந்தசாமி, ஞான்ஸ் எனும் ஞானபீடம் போன்றவர்கள் ஒதுங்கியிருக்காமல் மீண்டும் வலைப்பதிவுலகில்/தமிழ்மணத்தில் தென்படவேண்டும் என்ற என் விருப்பையும் பதிவு செய்கிறேன்.
எனது பார்வையில் இனிய π தின வாழ்த்துக்கள் போன்ற பல அறிவியல் தொடர்பிலான பதிவுகளை தந்துகொண்டிருக்கும் வெங்கட் ஐ வாழ்த்துகிறேன், இப்படியான பதிவுகள் மூலம்தான் தமிழ்ப் பதிவுலகம் சிறப்பான இடத்திற்கு செல்ல முடியும் என்பதையும் கூற விரும்புகிறேன்.
தமிழ்மணம் எதிர்காலத்தில் இத்தினத்தை கொண்டாடுவதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் வைத்துக்கொள்கிறேன்.
தோழமையின் புதிய வெளியீடுகள்
1.பிரதியிலுருந்து மேடைக்கு....
இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும், அதன் மூலம் சாத்தியப்படும் விரிவான உறவு நிலைகள் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன.
- வெளி ரங்கராஜன்
எழுத்தாளர் : கி.பார்த்திபராஜா
பக்கங்கள் : 112
விலை : 60.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
2.சூரனைத் தேடும் ஊர்
தீர்ந்துபோன நிழல். தொலைந்து கொண்டிருக்கும் கிராமம். வரமும் சாபமாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் உறவு. பன்முகங்கொண்ட பகையின் ஊற்று. நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி... இடையிடையே வாழ்வின் சாறாய் வார்த்தைகள்.எளிய வாழ்வின் குறைவில்லா ஆற்றாமை. கனவுகள் சுமக்கும் கண்கள். இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புக்கள். உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல். காவுகொள்ளப்பெற்ற சூழலின் வனப்பை
மீண்டும் யாசிக்கும் ஆதிமனம் என்று இப்படைப்பின் விரல்கள் தொட்டுக் காட்டும் வெளி தீராத விசாலங்கொண்டது.
- கவிதா
எழுத்தாளர் : ஜனகப்ரியா
பக்கங்கள் : 144
விலை : 90.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
3.அக்கினி மூலை
'குற்றம்' என்ற முதல் கதை 1971 இல் வெளியானது. அன்று தொடங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைபட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. இதுவரை எழுதப்பெற்ற கதைகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து வகைமாதிரிகளான படைப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. ஆதலால் இங்கு இடம்பெற்றதை விடவும் சிறப்பான வேறு கதைகள் இருந்தாலும் அவை சேர்க்கப்படவில்லை. நவீன யுகத்தில் நமது கிராமிய வாழ்வின் சோதனைகள், வீழ்ச்சிகள்,
நகரமயமாதலில் ஏற்பட்ட இன்னல்கள், நுகர்வுப் பண்டமாகவே இன்னும் நீடிக்கின்ற பெண்களின் நிலை போன்றவற்றைப் பேசுகின்ற வகைமாதிரிகளே இவை.
- களந்தை பீர்முகமது
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பக்கங்கள் : 184
விலை : 100.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
4.தலைநிமிர்ந்த தமிழச்சிகள்
சமூகத்திற்காகவும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மகத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள். ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில சாதனைப் பெண்களின் சிறிய பதிவே இந்நூல்.
பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம்.
எழுத்தாளர் : பைம்பொழில் மீரான்
பக்கங்கள் : 288
விலை : 175.00 In Rs
பதிப்பு : திருத்திய முதற் பதிப்பு
5.அலசல்
சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார். போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆளம் கண்டு எழுதியிருக்கிறார். ஒற்றை முத்தெடுக்க முக்கடலும் மூழ்க கொண்ட சேவியரின் இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுப்புத்தான். ஆனால் அதனுள்ளே சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.
இவை கற்பனையின் விளைச்சல் அல்ல; கருத்துக்கள். எது குறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும். இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.
- சுந்தரபுத்தன்
எழுத்தாளர் : சேவியர்
பக்கங்கள் : 128
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
6.இந்தச் சக்கரங்கள்
கிருஷ்ணவேணியும் வந்து ஒரு வீடு பார்த்தாள், கொஞ்சம் ஊருக்கு ஒதுக்கமாக இருந்த ஒரு வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அது ஓடு வேய்ந்த கொஞ்சம் பழைய வீடுதானென்றாலும் அதுதான் தன் அபிலாஷைகளுக்குச் சாதகமான இடம் என்று நினைத்தாள். காரணம், அந்த வீட்டிற்கு முன்னும் பின்னுமாக இருந்த காலியிடம். தூண்டில்காரனுக்கு மிதப்பில் கண், தன் ஜாதகப்படியும் மகன் ஜாதகப்படியும் இந்நேரம் ஓகோவென்று இருக்கவேண்டிய தன் வாழ்வைத் தடுத்து நிறுத்திவிட்ட ஏதோ ஒரு தரித்திர ஜாதகத்தை விட்டு விலகி வந்திருக்கிற நிலையில், இப்போதாவது அதற்கு வழி வகுக்கின்ற ஓர் இடமாகப் பார்க்க வேண்டுமல்லவா? இப்படி நிறைய இடம் இருந்தால், இரண்டு மாட்டைப் பிடித்து கொல்லையில் கட்டலாம்,
நாலு மூட்டை மிளகாய் வாங்கி வாசலில் காயப் போடலாம்; அள்ளலாம், வீடு ஒரு மாதிரிப் பழசாக இருந்தால் என்ன? கொஞ்ச நாளில் இதையே வாங்கிப் புதுப்பித்துக்கொண்டால் போகிறது...
- நாவலிலிருந்து....
எழுத்தாளர் : ஜெயந்தன்
பக்கங்கள் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
7.தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தும்போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார்.
இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒருபக்கம்தான். கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும் மறுபக்கம் ஆகும். புகழ் தனது நூலில் இரு பக்கங்களையுமே நமக்குக் காணத் தருகிறார்.
- தியாகு
எழுத்தாளர் : ஓவியர் புகழேந்தி
பக்கங்கள் : 384
விலை : 150.00 In Rs
பதிப்பு : மூன்றாம் பதிப்பு
8.பெரியார் சிந்தனைகள்
தமிழ்ச் சமூகத்திற்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற சிந்தனையும் கருத்துக்களும் பகுத்தறிவுப் பாதையும் இன்றும் நாளையும் தமிழர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் குறைவான பக்கங்களில் வெளிவரும் இந்நூல், வாசிப்பதற்கு எளிதானது.
மிக நுட்பமாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட கருத்துத் தொகுப்பு.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 64
விலை : 35.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
9.மக்கள் தலைவர் காமராசர்
இன்னும்கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் காற்றிலே பறந்துவிட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றி பேசிவருகிறார்கள். காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது. ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
எளிமையான வாழ்வின் மூலம் அரசியல் வாழ்வில் ஓர் அரிய இலக்கணத்தை உருவாக்கிய காமராசர் கிங்மேக்கராகவும் உயர்ந்தவர். வந்தப் பச்சைத் தமிழர் அப்படி என்னதான் செய்தார்? என்ற கேள்விக்கும்,அவருக்கும் கூட ஏன் நெருக்கடிகள் நேர்ந்தன என்பதற்கும் சிறு விடையாக இந்நூல்.
தொகுப்பாளர் : சுந்தரபுத்தன்
பக்கங்கள் : 192
விலை : 110.00 In Rs
பதிப்பு : முதற் பதிப்பு
ஈரோடு புத்தகத்திருவிழா - 2008
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத்திருவிழா, நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 11வரையில் தினமும் நடைபெறவுள்ள இப் புத்தகத்திருவிழாவில் பல பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
பார்வையாளர்கள் கட்டணமின்றி இப்புத்தகத்திருவிழாவில் பங்குபெறலாம்.
இந்த ஆண்டு புத்தகத்திருவிழா அமைப்பாளர்கள் மூன்று சிறப்பு அரங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழர் வரலாற்று அரங்கம்
பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட தமிழர் பண்பாடு, தமிழர் வரலாற்றுடன் தொடர்பில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.
உலகத் தமிழர் படைப்பு அரங்கம்
பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட, இந்தியாவிற்கு வெளியில் - ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பலவும் இந்த அரங்கில் கிடைக்கும்.
தமிழ்ப் பேச்சுக்கள் அரங்கம்
பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தமிழகத்தின் சிறந்த மேடைப் பேச்சாளர்களின் இலக்கியப் பேச்சுக்களின் குறுந்தகடுகள் (Audio CD) அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.
ஈரோடு புத்தகத்திருவிழா பற்றிய மேலதிக தகவல்களை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள சிறப்புப் பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நூலங்காடி
சாரதா பதிப்பகம், நாம் தமிழர் பதிப்பகம், சீதை பதிப்பகம்,ராமையா பதிப்பகம்,கெளமாரி எண்டர்பிரைஸஸ் ஆகிய பதிப்பகங்கள் இணைந்து இத்தளத்தை தடத்துகின்றன.
\\ இது ஒரு புத்தக ஆலயம், வாணிகத் தளம். அறிவுக்கும் ஆய்வுக்கும் நிறைவுக்கும் பயன்படும் விற்பனைக்குரிய புத்தகங்கள்.
உயிரணு முதல் உலக வரலாறு வரை
பனித்துளி முதல் பேரண்டம் வரை
இலக்கியம் முதல் இணையத்தளம் வரை
பல்வேறு துறைகள் நுணுக்கமாய் விளக்கமாய்க்
கல்வி, கலை, இலக்கியம், கணிதம், அறிவியல், வரலாறு,
சட்டம், வாழ்வியல், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் -
என விரியும், இணையற்ற அறிஞர்களின் அறிவுக்களஞசியங்கள்
புத்தக வடிவமாய் - உங்கள் பார்வைக்கு -
உங்கள் கைகளுக்கு வந்து கிடைக்க வழி வகை செய்கிறது.\\
என்ற கருத்தாகத்துடன் இத்தளம் செயற்படவுள்ளதாக அதன் முகப்பு கூறுகிறது.
நூலங்காடி நிறுவனத்திற்கு விருபாவின் வாழ்த்துக்கள்.
பதிப்பகங்களுக்கான Online CMS - esbull
பொதுவாக 99% தமிழ்ப் பதிப்பகங்கள் தங்களுடைய இணையங்களைப் பராமரிப்பதற்கு / மேம்படுத்துவதற்கு (WebSite Maitaince or Web Master) தனியாக தகுதியான ஒருவரை வேலைக்கு அமர்த்துவதில்லை. பதிப்பகத்தில் அச்சுப் பக்கங்களை வடிவமைப்பவரோஅல்லது நிர்வாக அலுவல்களைப் பார்ப்பவர்களே மேலதிகமாக இணையதளத்தையும் கவனித்துக் கொள்வார்கள். அல்லது இணையப் பக்கங்களை இலவசமாக அல்லது மிகக் குறைந்த ஊதியத்தில் வடிவமைத்துக் கொடுத்த நபர் எப்போதாவது ஒரிரு முறை இணையத்தில் தகவல்களை மேம்படுத்திக் கொள்வார்.
ஒரு சில பதிப்பாளர்கள், தாங்கள்தான் அதிக அளவில் கணினி, இணையம், மென்பொருள் தொடர்பான புத்தகங்களை உடனுக்குடன் தமிழில் வெளியிடுகிறோம் என்று பெருமையாக இதழ்களுக்குப் பேட்டிகள் வழங்கிக்கொண்டிருக்கும் அதேநேரம் அப்பதிப்பகத்தின் இணையதளம் இன்னமும் பழைய html நுட்பத்தில் அமைந்த ஆங்கிலப் பக்கமாகவும், அவர்களின் மின்-அஞ்சல் முகவரி Yahoo or Google போன்ற ஏதோ ஒரு இலவச சேவையில் இயங்குதலையும் பார்க்க முடியும்.
இவ்வாறு உள்ள தமிழ்ப் பதிப்பகங்களுக்கு esbull நிறுவனத்தின் e-commerce Shopping Cart Solution, Online Content Management System போன்றவை சிறப்பான ஒரு வரவே ஆகும்.
இதனைத் தமிழ்ப் பதிப்புலகம் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட பூமாலையா? என்பது பொறுத்திருந்து அவதானிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
இதுவரையில் சில பதிப்பகங்கள் esbull நிறுவனத்தின் சேவையைப் பெற்றுள்ளன.
National Book Traders - http://www.nbtonweb.com
மணிவாசகர் பதிப்பகம் - http://www.manivasagarpathippagam.com
வானதி பதிப்பகம் - http://www.vanathi.in
உயிர்மை - http://www.uyirmmai.com
வர்த்தமான் பதிப்பகம் - www.tamilonlinebookshop.com
திருமகள் நிலையம் - www.thirumagalnilayam.com
மேலும் சில பதிப்பங்கள் esbull நிறுவனத்தை அணுகியுள்ளதாகவும் அப்பதிப்பகங்களின் இணைய தள வடிவமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பாகவும் அறிய முடிகிறது.
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு சேவை வழங்கும் esbull நிறுவனத்திற்கு விருபாவின் வாழத்துக்கள்.
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் தொடர்ந்து நடத்தப்பெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி பதினோராவது வருடமாக நடைபெறவுள்ளது. 2008 - ஜூலை 5 முதல் - ஜூலை 14 வரையில் தினமும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக நாம் ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.
கண்காட்சி அரங்கின் வரைபடமும், கலந்துகொள்ளும் நிறுவனங்களின் அரங்க எண், தொடர்பு எண்களும் அச்சு ( Print ) எடுக்கும் நிலையில் ( As a PDF file ) தரப்பட்டுள்ளதால் வாசகர்கள் தாங்கள் வாங்க நினைத்துள்ள புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பகத்தை அல்லது விற்கும் புத்தக விற்பனையாளரை, அலைச்சலின்றி இலகுவில் அடைய முடியும்.
இணைப்பு : நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008
அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களின் எழுத்தாளர்கள்
2008 - 2009 நிதியாண்டில் தமிழக அரசு 27 தமிழறிஞர்களின் புத்தகங்களை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு 1967 முதல் 2008 வரையில் 94 அறிஞர்களின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
விருபா இணைய தளத்தில் அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
உலகப் புத்தக தின சிறப்பு மலர்
பாரதி புத்தகாலயம் உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது.
உலகைக் குலுக்கிய புத்தகங்கள்
கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்
கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயா
உயிரினங்களின் தோற்றம் - சாமிக்கண்ணு
ரூசோவின் 'சமுதாய ஒப்பந்தம்' - தஞ்சை மருதவாணன்
வால்டேர் எழுத்து - தஞ்சை இரா.இரத்தினகிரி
இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல் - திருவேங்கடம்
'டாவின்சிப் புதிரும்' காலனித்துவக் கடவுளின் இறுதிச் சடங்கும் - இரா.நடராசன்
அரிஸ்டாட்டிலின் நிக்கோமாசின் எதிக்ஸ் - விடுதலை இராசேந்திரன்
தலைவர்களை வசீகரித்த புத்தகங்கள்
லெனினைக் கவர்ந்த ஜாக் லண்டனின் 'உயிராசை' - கிருஷி
நேருவை வசீகரம் செய்த கவிஞன் ராபர்ட் ஃப்ரோஸ்ட் - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சுவாரஸ்யமான புத்தகங்கள்
உலகைச் சுற்றி 80 நாட்களில் - முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
ரிப் வேன் விங்கிள் - பெ.விஜயகுமார்
மதங்களைத் தெரிவோம்
விவிலியம் (பைபிள்) - ஆ.சிவசுப்பிரமணியம்
பகவத் கீதை - ந.முத்துமோகன்
குர்ஆன் - ஹெச்.ஜி.ரசூல்
தமிழ் வாசிப்பு
தொல்காப்பியம் - பா.ஜெய்கணேஷ்
சிலப்பதிகாரம் - ப.சரவணன்
திருக்குறள் - ஈரோடு தமிழன்பன்
வீரசோழியம் - கா.அய்யப்பன்
காந்தியம்
இந்திய சுயராஜ்ஜியம் - ராமாநுஜம்
நிலைத்த பொருளாதாரம் - க.பழனிதுரை
பொதுக் கட்டுரைகள்
சேக்ஸ்பியர் - சா.தேவதாஸ்
தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக் வேண்டிய நூல்கள் - அமரந்தா
நவீன ஆபிரிக்க இலக்கிம் : ஒரு பருந்துப் பார்வை - ஜி.குப்புசாமி
நோபல் இலக்கியம் சில தகவல்கள் - சுகுமாரன்
தமிழில் மார்க்சிய செவ்விலக்கிய நூல்கள் - என்.குணசேகரன்
ரஸ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள் - தமிழ்மகன்
திராவிட இயக்கப் புத்தகங்கள் - க.திருநாவுக்கரசு
சங்க இலக்கிய வாசிப்பு - அ.சதீஷ்
தமிழில் வாசிக் வேண்டிய தலித் புத்தகங்கள் - அழகிய பெரியவன்
தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள் - ஆ.செல்லபெருமாள்
தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்த புத்தகங்கள் - கி.பார்த்திபராஜா
பெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள் - அனுராதா
இளைஞர்களுக்கான சில புத்தகங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
'நம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்' - எஸ்.கண்ணன்
மேற்குறிப்பிட்ட கட்டுரைகளின் வழியே பல புத்தகங்கள் பற்றிய செய்திகள் ஒருங்கே குவிக்கப்ட்டுள்ளன. இவைதவிர தனியான புத்தகப் பட்டியல்களாக பின்வருவன தரப்பட்டுள்ளது.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 1
ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியிலில் பல்வேறு உப தலைப்புக்களில் புத்தகங்களின் தகவல்கள் தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் பெயர், அதனை எழுதியவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 2
'உலக இலக்கியம்' என வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பட்டியலில் அரபி, ஆங்கிலம், இத்தாலி, கிரேக்கம், சிங்களம், சீனம், டேனிஷ், துருக்கி, நார்வேஜியன், பார்மியன், பல்கேரிய,பிரெஞ்சு, போலிஷ், யுகோஸ்லாவியா, ரஷியன், ருமேனியா, ஜப்பான், ஜெர்மன், லத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், ஸ்பெயின் ஸ்பானிஷ், ஸ்விஸ், ஸ்வீடிஸ், ஹங்கேரி ஆகிய மொழிகளில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் கவிதை, தொகுப்பு, நாவல், நாடகம், சிறுகதை எனத் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலிலும் தமிழில் பதிப்பித்த பதிப்பகம், மொழி பெயர்த்தவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு மற்றும் மூல மொழியில் புத்தகத்தை எழுதியவரின் பெயர் போன்ற தகவல்கள் தரப்படுள்ளன.
ந.முருகேச பாண்டியன் தொகுத்த தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் என்ற புத்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட அட்டவணை என்ற அடிக்குறிப்பும் உள்ளது.
தமிழில் வாசிக்க வேண்டியவை - 3
கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூற்பட்டியிலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நூல் அட்டவணை என்ற அடிக் குறிப்புடன் உள்ள இப்பட்டியல் உப தலைப்புகளில் பல்வேறு நூல்களைப் பட்டியலிடுகிறது. புத்தகத்தின் பெயரும் எழுதியவரின் பெயரும் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக
மனிதனைத் தேடுகிறேன் - முடியரசன்
மேலதிக தகவல்களை, நாம் தேட வேண்டிய ஒரு அரைகுறைப் பட்டியல் என்றே இதனைக் கூறலாம். தவிரவும் இப்படியலில் கூறப்பட்டுள்ள புத்தகங்கள் மீண்டும் வருவதாகவும் உள்ளது.
பொதுவில் ஒரு தீவிர வாசகனுக்குத் துணைபுரியும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இம்மலரைப் பரிந்துரைக்கலாம்.
அரிதினும் அரிதான இப்பணியைச் செய்த குழுவினரையும், பாரதி புத்தகாலயத்தினையும் விருபா இணைய தளம் மனம் நிறைவுடன் பாராட்டுகிறது.
120 பக்கங்களுடன் 21*28 cm அளவு தாளில் வெளிவந்துள்ள இம்மலரின் விலை ரூ 60.00 மட்டுமே.
கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை
தொலைபேசி - 044 - 24332924
ஓசூர் புத்தகக் கண்காட்சி
ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் ஓசூர் புத்தகக் கண்காட்சி 26.04.2008 வெள்ளியன்று ஆரம்பமாகியுள்ளது.
மே 4 வரை நடைபெறும் இக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும், பிரபல இலக்கியவாதிகளின் உரையும் தினமும் நடைபெறும்.
முதல் முறையாக இப்பகுதியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால் பெருந்திரளான மக்கள் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்தியன் வங்கியின் ஓசூர்க் கிளை புத்தகங்கள் வாங்குவோருக்கு கடனுதவி வழங்க கண்காட்சி வளாகத்திலேயே சிறப்பு அரங்கில் செயல்படுகிறது.
விருபா இணைய தளத்தில் ஓசூர் புத்தகக் கண்காட்சி தொடர்பில் ஒரு சிறப்புப் பக்கத்தை இணைத்துள்ளோம். இக் கண்காட்சியில் பங்குபற்றும் பதிப்பகங்களின் பட்டியலையும், வகைப்பாட்டினையும் பதிப்பகங்களுக்கான அரங்க எண்களையும் இந்தப் பக்கத்தின் மூலம் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத்திடலில் நடைபெறும் இக் கண்காட்சி பற்றிய மேலதிக தகவல்களை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் - 914344 222622 அல்லது ஆதவன் தீட்சண்யா - 919443957700 ஆகியோருடைய தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்
சாகித்ய அகாதமி விருது - இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.
1955 முதல் 2007 வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.
இதனை http://www.viruba.com/Sahitya.aspx முகவரியில் பார்வையிடலாம்.
இப்பட்டியலில் உள்ள புத்தகங்கள் பற்றிய மேலதிக பதிப்புத் தகவல்கள் விருபா தளத்தில் முற்றாக இணைக்கப்படவில்லை.இப்புத்தகங்களை நாம் பார்வையிடவில்லை, பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத் தரவும்.
"நான் ஏன் எழுதுகிறேன்?" & "கண்ணியம்"
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன். 1990 முதல் இன்று வரையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு "கண்ணியம்" இதழில் பதிவு செய்யப்பட்டவற்றை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற புத்தக வடிவில் முதலில் வெளியிட உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளராக - ஒரு பதிப்பாளராக தான் செய்யாத அரிய பணியை செய்கின்ற "கண்ணியம்" குலோத்துங்கனை வெகுவாகப் பாராட்டிய ச.மெய்யப்பனின் வாழ்த்துக்களுடன் "நான் ஏன் எழுதுகிறேன்?" இதுவரையில் 13 தொகுதிகள் வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது.
"கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களினது எழுத்துக்கான காரணத்தையும் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் வெளியிட ஆர்வாமாக உள்ளார்.
தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.
விருபா தளமானது தமிழ் வாசகர்களின் தேடல்களிற்கு உதவுமாறு கட்டமைக்கப்பட்டது. விருபா தளத்தை இயக்கிக்கொண்டிருக்கும் "விருபா வளர் தமிழ்" செயலியானது நாளிற்கு நாள் மெருகூட்டப்பட்டு வருகின்றது. புதிய வித தேடல்கள், தேவைகளுக்கேற்ப அதன் கட்டமைப்பில் மாறுதல்களை நாம் செய்து வருகின்றோம். சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வெளியான புதிய புத்தகங்களை தனியாக அறிமுகப்படுத்தியிருந்தோம். அதேபோன்று இந்த ஆண்டின் தை மாதத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தகங்களிற்கான தமிழக அரசின் பரிசு வழங்கும் நிகழ்வுடன், இதுவரை காலமும் தமிழக அரசினால் பரிசு வழங்கப்பட்ட நூல்களின் பட்டியலை தொகுக்கும் பக்கத்தை தனியாக ஏற்படுத்தியிருக்கின்றோம்.
கடந்த வாரம் ஒரு மாறுபட்ட சந்திப்பில், விருபா தளத்தைப்பற்றி அறிமுகத்தையும், விளக்கத்தையும் கொடுத்த வேளையில், ஒரு தமிழாசிரியர், உங்கள் "விருபா வளர் தமிழ்" செயலியால், தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்களின் பட்டியலை தர முடியுமா என வினா எழுப்பினார்.
அவருடைய வினாவிற்கு விடையாக மறு நாளே "தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை" என்ற புதிய பக்கத்தை விருபா தளத்தில் ஏற்படுத்தி "விருபா வளர் தமிழ்" செயலியின் திறனை உறுதி செய்துள்ளோம். இப்புதிய பக்கம் வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கு உதவும் என்பதில் மகிழ்ச்சியே.
இதற்காக, கேள்வியை எழுப்பிய தமிழாசிரியருக்கு எமது நன்றிகள்.
அதேபோன்று இலக்கிய கூட்டங்களில் எம்மைச் சந்திக்கும் வேளைகளில் 'விருபா தளத்தின் Hits என்ன?' என்று வெறுப்பேற்றும் உள்ளங்களிற்காக இம்மாதத்திற்குரிய விருபா தளத்தின் Hits பொதுவில் வைக்கப்படுகிறது.
அகிலனின் "தனிமையின் நிழல் குடை"
தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, குறும்பட, ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில்.
"கனவுகளின் தொலைவு" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல் நேர்நிரை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
"எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது" என்று கவித்துவம் பேசும் அகிலன் தனது நூலிற்கு "தனிமையின் நிழல் குடை" என பெயரிட்டுள்ளார்.
"நம்மைக் கடந்த நிலையில் வலிய காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெருஞ்சுழலாக அது நம்மை அதற்குள் இழுத்துப் போட்டு விடுகின்றது. அகிலன் இதெல்லாவற்றையும் சரியாகவே அடையாளப்படுத்துகிறார். அவருடைய உலகம் கசப்புகளாலும் நிராகரிப்புகளாலும் ஆனவை. கனிவும் கருணையும் அன்பும் நிரம்பிய இதயத்தை நிராகரிக்கும் காலம் விரிந்திருப்பதை அகிலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. அகிலனின் மொழிதல் எளிமையும் தீவிரமும் கூடியது" என்று இவருடைய புத்தகத்திற்கான அறிமுகத்தை தந்திருப்பவர் கருணாகரன்.
உலக தாய்மொழி நாள்
இன்று (2008.02.21) உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.
தினமணியில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் உலக தாய் மொழி நாள் தொடர்பில் நிகழ்ச்சிகள் எதுவும் காணப்படவில்லை.
உலக தாய் மொழி நாள் தொடர்பில் ஆழி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, சென்னை, சூளைமேட்டில் உள்ள 117, நெல்சன் மாணிக்கம் சாலையில் மாலை 5:30 மணி அளவில் நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.
தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், செய்தித்துறையினர் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "காந்திஜியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் அறிமுக விழா, காந்திஜியின் அறுபதாவது நினைவு நாளான 2008.01.30 அன்று மாலை சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திரு. ஞாலன் சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, திரு.ஆர்.முத்துசுந்தரம் தலைமையேற்க திரு.ஆர். ரவிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நூலை அறிமுகம் செய்த பேரா. அ.மார்க்ஸ் தமது உரையில் "எங்களைப் போன்றவர்களின் காந்தியைப் பற்றிய வாசிப்பு என்பது காந்திஜியின் மரணத்திற்குப் பின் தான் துவங்குகிறது. இந்து மதத்தின் உயர்வுகளைப் பேசிக்கொண்டிருந்த காந்தி, இந்துமத அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்பட்டார். இது ஏன்? என்ற கேள்விக்குறியோடுதான் நாம் காந்தியை அணுகினோம். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தாலும், அவர்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தால் ஒடுக்ப்பட்ட மக்களிடையே, அவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்டனர், காந்தியோ மக்களை ஒடுக்கியவர்களிடம் பேசினார்.
மேலும் தெய்வத்தின் குரல் எழுதிய சங்கராச்சாரியார் காந்திக்கு எதிராக சிறு பிரசுரம் எழுதி வெளியிட்டுள்ளார். காந்திக்கு 'இந்து மதத்தில் தீண்டாமை இல்லை, அது பிற்காலத்தில் வந்தது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது, இந்து மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்று நம்பினார்."
அடுத்து நூலை அறிமுகம் செய்த டெல்லி IIT யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.சுவாமிநாதன் தமது உரையில் "இந்த கட்டுரை நான் டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்து பத்திரிகையில் வெளியானது. அங்கு இந்து சில இடங்களில்தான் கிடைக்கும், எழுத்தாளர் ப்ரேம்சந்தின் பேரனும் நானும் தொடர்ந்து படித்து விவாதம் செய்வோம். கட்டுரையின் கனத்தை வைத்து இக்கட்டுரைக்காக இதன் ஆசிரியர் இராமமூர்த்தி அதிக அளவில் ஆய்வுகளை, தேடல்களை செய்துள்ளமை உணரக்கூடியதாக இருந்தது. இந்த காந்திஜியின் இறுதி 200 நாட்கள் என்பது காந்தியின் வாழ்வில் முக்கியமானதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. மிக முக்கியமான ஆவணம்" என்றார். இந்துவில் வெளியான இக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெட்டி ஒட்டி வைத்திருந்த ஒரு தொகுப்பை காண்பித்தார்.
இந்து பத்திரிகையில் காந்திஜியின் இறுதி 200 நாட்கள் தொடர் கட்டுரையை எழுதிய வி.ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற இந்திய அரசு ஆட்சிப் பணியாளர் (I.A.S), வானொலியில் cricket போட்டிகளை வர்ணணை செய்தவர். கராச்சியில் பிறந்த இவர், பிரிவினையின் போது தனது பன்னிரண்டாவது வயதில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இங்கு வந்தவர். அவர் தனது சிறப்புரையில் "காந்தியின் தேவை இன்றைக்கும் இருக்கிறது. காந்திஜியின் வாழ்க்கை முழுவதும் பல வித சோதனைகளும், சுவாரஸ்யங்களும், குறும்புகளும், ராஜ தந்திரங்களும் நிரம்பியவை, அவருடைய வாழ்க்கை மிகவும் துல்லியமாக ஆவணமாக்கப்பட்டுள்ள ஒன்று. இன்றைக்கும் உலகம் முழுமைக்கும் காந்திஜியின் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நூல் நல்ல மொழிபெயர்புடன், நல்ல தயாரிப்புடன் வெளிவந்திருக்கிறது" என்றர்.
வரவேற்புரை வழங்கிய ரவிராஜன் பாரதி புத்தகாலயத்தின் பதிப்புச் சேவையை விதந்து பாராட்டினார். தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகின்ற இக்காலத்தில் தேசபிதா பற்றிய ஒரு தக்க ஆவணத்தை தமிழில், அதுவும் 900 பங்களில் தருவது என்பது மிகப் பெரிய பணி என்பதை குறிப்பிட்டார்.
1997,1998 காலப்பகுதியில் இந்து நாளிதழில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். 1947 ஜூலை 15 முதல் 1948 ஜனவரி 30ம் நாள் வரையிலான 200 நாட்கள் தேசபிதா காந்திஜி மத நல்லிணக்கத்திற்காக போராடிய நாட்களாகும். இந்து முஸ்லிம் மத வெறியர்களுக்கு எதிராக தன் உயிரைப் பணயம் வைத்த நாட்கள் இவை. எந்த அளவிற்குத் துயரமும் வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த 200 நாட்களும் இருந்தன என்ற விரிவாகவும் தெளிவாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல்.
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
தமிழாக்கம் : கி.இலக்குவன்
விலை : ரூ 350.00
பக்கம் : 900
வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்
"வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்" என்று ஒரு தனியான வகைப்பாடினை ஏற்படுத்தி, அவ் வகைப்பாட்டில் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பரிசு பெறுபவர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கி வருகின்றது. விதிமுறைகள் 19 மற்றும் 24 இல் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்குரிய தகவல் தரப்பட்டுள்ளது.
கடந்த 2008.01.16 அன்று சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் 2006 ஆம் ஆண்டிற்கான பரிசுகள் வழங்கப்பட்டன. 2006 இற்குரிய வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் வகைப்படுத்தலில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை என்பதால் பரிசுகள் வழங்கப்படவில்லை. பல வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்பரிசுத் திட்டம் பற்றிய விதிமுறைகள், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்காமையே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என நாம் எண்ணுகிறோம்.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல் தளமான விருபாவில் பலர் இத்தகவலை எதிர்பார்ப்பதால், நாம் இதனை எமது தளத்தில் சேர்த்துள்ளோம், கூடவே இதுவரை தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களை ஒரே பார்வையில் பார்க்கக்கூடியாவறு ஒர் தனிப் பக்கத்தையும் புதிதாக அமைத்துள்ளோம்.
இதுவரை காலமும் இவ்வாறு தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடித் தொகுத்துத் தர முயற்சி செய்கிறோம்.
ஓர் எழுத்தாளர் அல்லது பதிப்பகம் எத்தனை முறை பரிசு பெற்றுள்ளது என்பதையும் ஆண்டுவாரியாக எந்த எந்தப் புத்தகங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதையும் இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
"தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்" பற்றிய
1. விதிமுறைகள்
2. விண்ணப்பப்படிவம்
3. உறுதிமொழி
Disclaimer :
மேற்படி விவரங்கள் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் (2008-01-16) தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்பக்கத்தில் உள்ள தட்டச்சுத் தவறுகள் தவிர்ந்த ஏனைய விவரங்களை நேரடியாக தமிழ் வளர்ச்சித்துறையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். விருபா இணையதளம் எந்த நிலையிலும் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாகாது. தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தகச் சந்தை
தேடல் மிக்க தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்துகின்றோம். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, நன்மதிப்பைப் பெற்ற ஒரு வலைப்பதிவாளர், தமிழ் இணைய ஆர்வலர் இதனை வடிவமைக்கும்/நிர்வகிக்கும் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார்.
வாசகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் பழைய அரிதான புத்தகங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்ய இத்தளம் முனைகிறது. நடந்து முடிந்த 2008 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய பல பதிவுகளை ஒருங்கே சேர்த்துள்ளது. வாசக-படைப்பாளி-விற்பனையாளர் இடையே ஒரு பாலமாக இருக்க முனையும் இத்தளத்தின் இதர பணிகளை, நோக்கங்களை வாசகர்கள் நேரடியாக தமிழ் புத்தகச் சந்தை தளத்திற்கு சென்று பார்வையிட கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் புத்தகச் சந்தை வெற்றி பெற விருபா மனதார வாழ்த்துகிறது.
2008 புத்தகத்திருவிழா - தமிழினி
\\தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்\\
என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது 'தமிழினி' என்னும் கலை இதழ்.
ஆசிரியர் : நா.விஸ்வநாதன்
தொடர்புமுகவரி : 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014
தொலைபேசி : +91 9884196552
விலை : ரூ 20.00
- ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை - கரு. ஆறுமுகத்தமிழன்
- வலைப்பதிவுலகம் : வலைக்கும்மி - ஹரன் பிரசன்னா
- ஆய்வுக் கட்டுரை : உலகமயமாக்கல் ; அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்
- 89362 : அகில்
- நாடோடித் தடம் : குஜராத் நினைவுகள் - ராஜ சுந்தரராஜன்
- மோடி விலாசம் - அகில்
- கட்டுரை : 2000 நாட்கள் ; பழங்குடி மக்களின் சமர் - அ.முத்துக்கிருஷ்ணன்
- விளையாட்டு : மின்னல் வீரன் - எம்.கோபாலகிருஷ்ணன்
- நாஞ்சில் நாடன் 60
- ஆளுமைச் சித்திரம் : தாடகை மலை அடிவாரத்தில் - ஜெயமோகன்
- சிறுகதை : யாம் உண்பேம் - நாஞ்சில் நாடன்
- ஆய்வுக் கட்டுரை : கூத்தில் ஓர் தோய்வு - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
- தமிழறிஞர் வரிசை : ஆ.முத்துசிவம் ; விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் - அ.கா.பெருமாள்
- விமர்சனம் : இயல் விருதின் மரணம் - ஜெயமோகன்
- இலையுதிர் காலத்தில் ஒரு விருது - தேவசகாய குமார்
- சிற்பவியல் : ரதி - செந்தீ நடராஜன்
- நூல் விமர்சனம் : வெண்ணிலையும் வேணுகோபாலும் - தேவதேவன்
- நகுதற் பொருட்டன்று : காரோடும் வீதி - மகுடேஸ்வரன்
- உரைவிளக்கம் : கவிதையின் பன்முகப் பரிமாணங்கள் - இரா.குப்புசாமி
- திரை விழிவு : ராஜ சுந்தரராஜன்
- மனநிழல் : எச்சரிக்கை ; இது பொதுவழி அல்ல - பாதசாரி
2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்
இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது. இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது.
அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன.
இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில் : பி.ஆர்.பரமேஸ்வரன்
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
2.குழந்தைகளை கொண்டாடுவோம்
இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும்.
எழுத்தாளர் : ஷ.அனமஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
பக்கம் : 158
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
3.கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்
தன் பிறப்பு தனக்குரிய சமூக வாழ்க்கை இவற்றைக் கடந்து தனக்காக தன் சொந்த முயற்சியால் இன்னொரு உலகதைதைப் படைத்துக் கொள்ள விரும்பிய ஒரு பழங்குடி இளைஞனின் கதை. புதுப்பிறப்பெடுக்க விரும்பிய அவனது முயற்சியை சமகால சமூகம் முறியடித்த கதை.
எழுத்தாளர் : மகாசுவேதா தேவி
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
பக்கம் : 176
விலை : 90.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
4.கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி
மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச் சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை.
தமிழகத்தில் முதல்தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்விமுறை கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.
எழுத்தாளர் : வசீலி சுகம்லீன்ஸ்கி
தமிழில் : முனைவர் அ.வள்ளிநாயகம் & வ.அம்பிகா
பக்கம் : 144
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
5.புதிய உலகம்
இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.
எழுத்தாளர் : முத்து மீனாட்சி
பக்கம் : 88
விலை : 35.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
6.மலர்ந்து மலராத
விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி.
பழமையான கலாச்சாரத்தில் ஊறியவர்கள் இப்புத்தகத்தை அவ்வளவாக வரவேற்காமலிருக்கக் கூடும். அவர்களது எண்ணங்களை மதித்து நாம் அவர்களுக்கு கூற விரும்புவது."இப்புத்தகம் அறிவியல் ரீதியானதே. இதில் கொடுக்கப்ட்டுள்ள உண்மைகள் யாவும் இயற்கை நிகழ்வுகள் பற்றியனவே. இந்த உண்மைகளைப் பற்றி விடலைப் பருவத்தினர் ஆரோக்கியமான முறையில் அறிவது நல்லதல்லவா?, அதுமட்டுமன்று பல பாலியல் பற்றிய விவரங்களை, திரித்தும் கவர்ச்சியூட்டும் வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதத்தில் சிறு புத்தகங்களாக வெளியிட்டு பல்வேறு சமூக விரோதிகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது நடைமுறையில் இருக்கும் வருந்தத்தக்க ஒன்றாகும்."
மேற்கூறிய காரணங்களால் அறிவியல் பூர்வமாக இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து வெளியிட்டுள்ளோம்.
ஆக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினர்
பக்கம் : 80
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்
கலாநிதி க.கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. இவை 1967 ஆம் ஆண்டுமுதல் 1981 ஆம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வுநூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை. இலக்கிய ஆர்வலர்களால் நீண்டகாலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னிரைகளை அவ்வப்போது கைலாசபதி எழுதி வழங்கினார். நாவல் என்ற இலக்கிய வகையின் இயல்புகள் பற்றியும், யதார்த்தவாதம் பற்றியும் கோட்பாடு முறையிலான ஆய்வுகள் வெளிவராத காலத்தில் "செவ்வானம்" (1967) போன்ற நாவல்களுக்கு அவர் வழங்கிய முன்னுரைகள் அவரிற்கு தமிழ் இலக்கிய உலகில் நிலையான ஓர் இடத்தை தேடிக்கொடுத்தன. இந்நூலில் இடம்பெறும் முன்னுரைகளிற் சில அவரது நெருங்கிய நண்பர்களதும், மாணாக்கர்களினதும் நூலிற்கு அவர் எழுதி வழங்கியவை.பெரும்பாலானவை இலக்கியப்பிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற பெருவட்டத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களிற்கு அந்நூல்களை ஆக்கியோரது வேண்டுகோளின்படி எழுதி வழங்கப்பட்டவை. குறித்த இலக்கியவகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன.
எழுத்தாளர் : க.கைலாசபதி
பக்கம் : 202
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
2.தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா (பாடவிமர்சனவியல் நோக்கு)
தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே.சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும், அவர் காலத்திலே முக்கிய இடம் பெற்றிருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணி பற்றியும் இச்சிறு நூல் எடுத்துரைக்க முயல்கிறது. அத்துடன் தமிழ்நூற்பதிப்புப் பணியினை இவர்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் இவர்களுக்குப் பின் தமிழ்நூற் பதிப்புப் பணியிற் பேரிடம் பெறவேண்டிய வையாபுரிப் பிள்ளையின் பதிப்புப் பணிகளையும் இது குறிப்பிட்டுச் செல்கிறது. "Testual Critisim" எனும் பதத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு 'பாடவிமர்சனவியல்' என்பதே என நிறுவி அத்துறையின் வரையறைக்குள் நின்றுகொண்டு மேற்கூறிய அறிஞர்கள் பற்றிய சிற்றாய்வினை இந்நூல் மேற்கொள்கிறது.
எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
3.தொல்காப்பியமும் கவிதையும்
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப்பற்றி (பா) கூறுவனவும் அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பது பற்றியும் விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலிலே காணலாம். தமிழிற் கவிதை வளர்ச்சிப்பற்றிய தொடக்க நிலைச் சிந்தனைகளை இந்நூல் ஆராய்கின்றது.
எழுத்தாளர் : கார்த்திகேசு சிவத்தம்பி
பக்கம் : 58
விலை : 45.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
4.ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்
தமிழ் நாடகத்துறையிலே ஏறத்தாழ ஐம்பது வருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தலைசிறந்த வானொலி நடிகர், மேடை நடிகர், நாடக நெறியாளர், தயாரிப்பாளர், நாடகப் பதிப்பாளர், நாட்டுக்கூத்தின் மீட்சிக்காக பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து உழைத்தவர். நாடகத்தை தனது மேற்படிப்புக்கான கற்கையாகத் தெரிவு செய்து கற்றவர். நாடகத்தை பல்கலைக்கழக உள்வாரி மாணவருக்கும் பாடசாலைக்கும் உரிய கற்கை நெறியாக ஆக்கி அவற்றுக்கான பாடத்திட்டத்தை தயாரித்தவர். அந்தவகையிலே ஈழத்து அரங்கத்துடனும் அரங்க வரலாற்றுடனும் இணைந்துகொண்டவர். இன்றைக்கு இலங்கையிலே நாடகத்தைப் பற்றிப் பேசுகின்ற எழுதுகின்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரோடு ஆசிரிய - மாணவத் தொடர்பு அல்லது நட்புத் தொடர்பினை உடையவர்களே. அவரோடு முரண்படுபவர்களும் இதில் அடக்கம். இவ்வாறாக நீண்டகாலமாக நாடக அரங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் , ஈழத்திலெழுந்த தொண்ணூறு வீதமான நாடகம் பற்றிய நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். எழுதும்படி வேண்டப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக அவர் எழுதிய முன்னுரைகள் ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சியையிம் அதில் உழைத்தவர்களையும் பற்றிப் பேசுவனவாய் உள்ளன. எனவே ஈழத்து அரங்க வரலாறு பற்றியறிவதற்கு இவை மிகுந்த பயனளிப்பன. நாடகம் என்றால் என்ன? எனத்தொடங்கி, கற்கைநெறியாக 'அரங்கு' என்ற நூலுக்கான முன்னுரைவரை வெளிவந்த இருபது முன்னுரைகளையும் பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப்பணிகள், பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகப் பணிகள், மலையக அரங்கு பற்றிய ஒரு சிந்திப்பு ஆகிய கட்டுரைகளையும் தொகுத்து வாசிக்கும்மோது இதனை அறிந்து கொள்ளமுடியும்.
தொகுப்பாசிரியர் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
பக்கம் : 180
விலை : 120.00 In Rs
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்
"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( History Of The Tamils ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்றுகளுடன் எழுதாமல் தவிர்த்து விடுகின்றனர்.
இக்குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக்கொண்டு தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 270
விலை : 185.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
2.தொன்மைச் செம்மொழி தமிழ்
தமிழ், முந்து செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கியுள்ள இந்நூல், செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கியுள்ளது.
நூலாசிரியர் பி.இராமநாதன் மொழியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்.
எழுத்தாளர் : பி.இராமநாதன்
பக்கம் : 96
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
3.நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்
நா.மு.வே.நாட்டார் அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது
எழுத்தாளர் : நா.மு.வேங்கடசாமி நாட்டார்
விலை : 4800.00 In Rs
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
2008 புத்தகத்திருவிழா - NCBH
1930-2004 வரையிலான 75 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் தேர்த்தெடுத்த கதைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டுள்ள இந்நூல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தமிழின் முதல் வரலாற்று ஆவணமாகும்.
நவீன தமிழ் இலக்கியத்தின் புது ஊற்றாகப் புறப்பட்டிருக்கும் பெண்ணிய படைப்புக்களில் உற்சாகம் பீறிடுகிறது. இளைய தலைமுறையினரின் உத்வேகம் இலக்கிய வெளிக்குப் புதுமுகத்தைத் தருகிறது. இப்புது உத்வேகத்தால் உந்தப்படும் இளைய படைப்பாளிகள் தங்கள் வேர்களைத் தேடிப் பயணிக்கிறார்கள். அப்படியான தீராத் தேடலின் மிகச் சிறிய பதிவே இத்தொகுப்பு.
உரத்து ஒலிக்கும் தமிழ்ப் பெண் கவிதைகளில் அ.வெண்ணிலாவின் குரல் தனித்துவமானது. மனிதத்திற்கான பேரன்பு சுரக்கும் ஈரத்துடன் புனையும் அ.வெண்ணிலா, இத்தொகுப்பின் மூலம் தொகுப்பாசிரியராகி உள்ளார்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH
2.என் இனிய ஹைக்கூ
தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் முக்கியமானவர் மு.முருகேஷ். கால் நூற்றாண்டாக கவிதைத் தளத்தில் இயங்கிவரும் ஆர்வமிக்க கவிப்பயணி."இனிய ஹைக்கூ" கவிதை இதழின் வழி தமிழ் ஹைக்கூவை உலகெங்கும் கொண்டு சென்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் 'நிலா முத்தம்' என்னும் பெயரில் மலையாளத்தில் நூலாக வெளிவந்துள்ளது.
எழுத்தாளர் : மு.முருகேஷ்
பக்கம் :
விலை :
வெளியீடு : NCBH
( NCBH நிறுவனம் பல புதிய புத்தகங்களைக் 2008 கண்காட்சிக்காக பதிப்பித்துள்ளது, அவற்றின் தகவல்கள் இன்னமும் எமக்குக் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் இதே பக்கத்தில் சேர்த்துக்கொள்ளபடும்.)
2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்
பொன்னி பதிப்பகத்தின் பதிப்பாளர் வைகறை அவர்களை ஆசிரியராகக்கொண்டு சாளரம் இலக்கிய மலர் இரண்டாவது ஆண்டாக 2008 புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழியல் சார்ந்த பல கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான அறிவுசார் கட்டுரைகளுடனும் சாளரம் இலக்கிய மலர் மலர்ந்துள்ளது.
"புத்தகப் பதிப்புத் துறையின் திசைவழி என்ன?" என்ற ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புச் சூழலில் இன்றைய நிலமையை கூறுகிறது. அரசு நல்லெண்ணத்தில் நாட்டுடமையாக்கிய நூல்கள் பல பதிப்பாளர்களால் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுதலால் ஏற்படும் தனித்துவ இழப்பையும் சுட்டிக்காட்டுகிறது.
- அன்பினுக்கு நிவேதனமாய் (நூல் காணிக்கைகள் பற்றிய குறிப்பு) - பழ.அதியமான்,
- என்றும் கிழியாது என் பாட்டு - குட்டி ரேவதி
- நமது பண்பாட்டில் மருத்துவம் - முனைவர் தொ.பரமசிவம்
- செ குவெரா : மற்றொரு வெற்றி - எஸ்.வி.ராஜதுரை
- நிழல்களில் கரையும் நிஜங்கள் (திரைப்படத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய பார்வை) - ஓவியா
- வாட்சன் : தோட்டத்தொழிலாளர்களின் நண்பன் - டி.கே.ரகுநாதன்
- ஆவிகளும் ஆண்டைகளும் - பாமா
- காணாமற் பொகும் கடற்குதிரைகள் - பொ.ஐங்கரநேசன்
- ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் - ந.முருகேசபாண்டியன்
- மாதவியின் பதினோராடலில் கொடுகொட்டி : கூத்தின் அடித்தளங்களை முன்வைத்து... - முனைவர் த.கனகசபை
- ஜீவாவின் முதல் நூல் வெளியிட்ட கோவை ஆர்.கிசன் - செந்தலை ந.கவுதமன்
- சோசலிசம் வேர்பிடித்துவிடாமல் தடுக்கும் முதலாளித்துவம் (வெனிசுலேவாதேர்தலும் : ஊடகப் பொய்களும்) - அமரந்தா
- குறடு - அழகிய பெரியவன்
- சிலப்பதிகாரத்தில் அறிவுத்திற மேம்பாடு - பேரா க.பஞ்சாங்கம்
- மலைத்தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை குறித்த நாட்டார் பாடல்கள் - ஆ.சிவசுப்பிரமணியன்
- பாரதிதாசன்-ஞானபீடப் பரிசு தொடர்பாக ஒரு பதிவு - கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- வள்ளலாரின் மொழிக் கோட்பாடு - ப.சரவணன்
- தாஸ்தாயேவ்ஸ்கியின் "கரமஸோவ் சகோதரர்கள்" - தமிழில் வண்ணநிலவன்
- "ஸீ ஷோனகனின் தலையணைப்புத்தகம்" - தமிழாக்கம் தஞ்சாவூர்க் கவிராயர்
- இருந்துபார் தெரியும் வலி - புதுவை இரத்தினதுரை
- வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் - கி.பாரத்திபராஜா
- 'மொழியில் வாழ்தலும்' 'மொழிச் சலவை'யும் - பொதிகைச் சித்தர்
- மோருக்குச் சோறில்லை - கார்முகில்
- காடு எரிந்துகொண்டிருக்கிறது - இளம்பிறை
- மறுமலர்ச்சி இதழ்களின் முன்னோடி : சீர்திருத்தச் செம்மல் சொ.முருகப்பா - ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி
- ஆழ்கடலில் ஒர் வரலாற்றுத் தேடல் - பேராசிரியர் வி.அ.இளவழகன்
- வரலாற்றின் குரல்களும் குரல்களின் வரலாறும் - முனைவர் செ.சோ.பிலிப்சுதாகர்
- நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் - அ.கா.பெருமாள்
- கேரேன் ப்ரெஸ் & அன்டயெ க்ரோக் : இரு தென்னாபிரிக்கப் பெண் கவிஞர்கள் - தமிழில் வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
- தொல்காப்பியத்தில் மணமும் சாதியும் - சி.அறிவுறுவோன்
- எது அறிவியல்? - பா.ஸ்ரீகுமார்
- மனுதர்மமும் தமிழ் அறமும் - ஞானி
- கண்ட்ரோல் - வே.இராமசாமி
- "கற்றல் நன்றே" பண்டைத் தமிழகத்தில் கற்றல் என்பது யாது? - மே.து.ராசு குமார்
- 2007 சில நினைவுகள் - அ.மார்க்ஸ்
- வடமொழி இலக்கியக் கோட்பாடுகள் - பேராசிரியர் வ.ஜெயதேவன் & கி.காவேரி
- ஈழம்-மலேசியா : ஈழத்து இலக்கிய சாட்சியம் - கி.பி.அரவிந்தன்
- கடமை தவறும் ஊடகங்கள் - பைந்தமிழ்
- மாசேதுங் படைப்புகள் - மயிலை பாலு
- மற்றும் சில கவிதைகள்....
248 பக்கங்களுடன் A4 அளவுதாளில் உறுதியான கட்டமைப்புடன் வெளிவந்துள்ள சாளரம் இலக்கிய மலரின் விலை ரூ 125.00 ஆகும்
2008 புத்தகத்திருவிழா - உங்கள் நூலகம்
New Century Book House வாசகர் சங்கத்தின் இதழாக வெளிவரும் 'உங்கள் நூலகம்' சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது.
சிறப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புத்தொழில் தொடர்பில் பல ஆக்கபூர்வமான விடயங்களை பேசுகிறது. வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நன்மைகருதி தமிழக அரசிற்கும் பப்பாசி அமைப்பிற்கும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகவும், கட்டுரையாளராகவும் கலந்துகொள்ளும் முனைவர் இராம.சுந்தரம் அவர்களின் 'மொழியில் எதையும் சொல்ல முடியும்' என்ற தலைப்பில் அமைந்த நேர்காணலுடன் தமிழின் சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் கட்டுரைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.
எஸ்.வி.ராஜதுரை, சுகுமாரன், இன்குலாப், மு.ராமசாமி, தொ.பரமசிவன், பாவண்ணன், பெ.மணியரசன், ச.சுபாஷ், சந்திரபோஸ், தேவ.பேரின்பன், இராசேந்திரசோழன், ஜெயமோகன், பெருமாள் முருகன், தேவதேவன், அ.கா.பெருமாள்,
அ.ராமசாமி, பொ.வேல்சாமி, அ.மங்கை, வீ.அரசு, க.மோகனரங்கன், ச.பாலமுருகன், பா.வீரமணி, இரா.காமராசு, பா.ஆனந்தகுமார், கமலாலயன், உதயை மு.வீரையன், சுதந்திர முத்து, மணிகோ பன்னீர்செல்வம், கோபால்தாசன்,
தமிழ்மகன் ஆகியோரின் கட்டுரைகள், ஆக்கங்கள் இச்சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளன.
120 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பிதழின் விலை In Rs 20.00
2008 புத்தகத்திருவிழா - புதிய புத்தகம் பேசுது
சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது புதிய புத்தகம் பேசுது.
இச்சிறப்பு மலரில் தமிழ் கலை, பண்பாடு மற்றும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒன்பது பேருடைய நேர்காணல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இந்நேர்காணல்கள் சமூகம் சார்ந்து இயங்கும் இவர்களின் முழு ஆளுமையையும், இயங்கு தளத்தையும் வாசகர்களுக்கு விரிவாக எடுத்து வைக்கின்றன.
1. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி - இரா.நடராசன் & அ.வெண்ணிலா
2. பத்ம ஸ்ரீ கமலஹாசன் - அ.வெண்ணிலா
3. சங்கரய்யா - ரமேஷ் பாபு
4. பிரபஞ்சன் - முருகேச பாண்டியன்
5. ஆ.இரா.வெங்கடாசலபதி - ச.தமிழ்ச்செல்வன்
6. பேராசிரியர் நா.தர்மராஜன் - சே.கோச்சடை & அமரந்தா
7. உஷா சுப்பிரமணியம் - அ.வெண்ணிலா
8. பெருமாள் முருகன் - கோவை வாணன்
9. டிராஸ்கி மருது - ராகுல சங்கமி
2007 இல் வெளியான 50 சிறந்த புத்தகங்களுக்கு மதிப்புரைகளையும் வழங்கியுள்ளார்கள்.
118 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பு மலரின் விலை : ரூ 60.00 ஆகும்.
2008 புத்தகத்திருவிழா - எதிர்
அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சச்சார் குழுவின் ஆய்வு முறை, முன்வைத்துள்ள முக்கிய பரிந்துரைகள் ஆகியவற்றை அத்தியாவசியமான வரைபடங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் உங்கள் முன் வைக்கிறது இந்நூல்.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 140
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2.காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு
இந்து மதத்திற்கென அடிப்படையான சாத்திர நூல் எதுவும் இல்லை. இந்து மத மரபு என்பதற்காக பகுத்தறிவிற்கு பொருந்தாத எதையும் ஏற்க இயலாது. சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிடமுடியும் எனக் கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது.
இந்து சனாதனத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியில் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார் அ.மார்க்ஸ்.
காந்தியடிகள் ஆலயப்பிரவேச இயக்கம் நடத்தியபொழுது, அதற்கு எதிராக தமிழ்ச்சனாதனிகள் பல தளங்களில் இயங்கினர். அவர்களில் ஒருவரான மா.நீலகண்ட சித்தாந்தி எழுதிய 'தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம் (தடை)' இங்கே முழுமையான மீள்வெளியீடு செய்யப்படுகிறது.
எழுத்தாளர் : அ.மார்க்ஸ்
பக்கம் : 160
விலை : 80.00 In Rs
பதிப்பகம் : எதிர் வெளியீடு
2008 புத்தகத்திருவிழா - யாழினி முனுசாமி
சிற்றிதழ், குறும்படம், கவிதை என இயங்கிக்கொண்டிருக்கும் யாழினி முனுசாமி, இந்நூலில் பல்வேறு தலித் கவிஞர்களின் தலித் கவிதைகள் குறித்தும், முனைவர் கோ.கேசவன் மற்றும் அ.மார்க்ஸ் போன்றோரது தலித்திய சிந்தனைகள் குறித்தும், எழுத்தாளர் சிவகாமியின் 'பழையன கழிதலும்...' நாவல் குறித்தும், கே.ஏ.குணசேகரனின் 'வடு' குறித்தும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து 'தலித் இலக்கியமும் அரசியலும்' என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 144
விலை : 70.00 In Rs
பதிப்பகம் : இருவாட்சி
2.தேவதையல்ல பெண்கள்
நஙீன கவிஞர்களில் தனித்துவமான குறிப்பிடத்தக்க கவிஞர் யாழினி முனுசாமி. வாழ்வின் முரண்பாடுகள் போதாமைகள் சார்ந்து துக்கம் இக்கவிதைகளில் ததும்பி நிற்கின்றது.
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 72
விலை : 40.00 In Rs
பதிப்பகம் : உயிர்மை
The Jaffna Public Library Rises From Its Ashes
தன்னைச் சுற்றியுள்ள சமூக மக்களின் வாசிப்புத்தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன், க. மு.செல்லப்பா என்ற சமூக அக்கறையுள்ள ஒரு தனிமனிதன் 1933 இல் ஆரம்பித்த முயற்சிகளை முதல் அடியாகக் கொண்டு எழுப்பப்பட்டது யாழ்ப்பாண பொது நூலகம்.
ஆயிரத்திற்கும் குறைவான அரிய புத்தகங்களுடனும் முப்பது இதழ்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட சிறிய நூலகம், 1953 இல் மக்களின் தேவைகளுக்கேற்ப, புதிய வடிவமும் அதிக வசதிகளும் பெறவேண்டிய அவசியம் எழுந்தது. புதிய இடத்தில் புதியபொலிவுடன் நூலகம் அமைப்பது என்று நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் கிடைத்தன. அமெரிக்க தூதுவர் அலுவலகம் அதிக அளவில் தனது பங்களிப்பாக 104,000.00 ரூபாவையும், இந்திய தூதுவர் அலுவலகம் 10,000.00 ரூபாவையும் தர யாழ் வணிகர்களும் மக்களும் நன்கொடைகள் கொடுத்து நிதி சேகரிக்கப்பட்டது.
நூலகத் தந்தை S.R.ரங்கநாதனின் ஆலோசனையுடனும், சென்னை அரசின் திராவிட கட்டக் கலை நிபுணர் V.M.நரசிம்மனின் வடிவமைப்புடன் உலகத்தரத்தில் யாழ்பாண பொதுநூலகம் 1959 இல் கட்டியெழுப்பப்பட்டது. யாழ்பாண மக்களிடம் இருந்த அரிய ஓலைச்சுவடிகள், நூல்கள் பலவும் சேகரிக்கப்பட்டு நூலகத்தில் சேர்க்கப்பட்டது.
யாழ்ப்பணத் தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக, அறிவுக்களஞ்சியமாக யாழ்ப்பாண பொது நூலகம் கருதப்பட்டது. பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றது.
இவ்வாறு பெயர் பெற்ற நூலகம் 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவில், சிங்கள காடையர்களினால் தீயிடப்பட்டு சாம்பலானது. 97ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தனர். தமிழர்களின் அடையாளச்சின்னம் சாம்பலானது.
உலக மக்களும் நூலகங்களும் இதனை ஒரு படுகொலையாகவே கணித்தன, காட்டுமிராண்டித்தனமான செயலிற்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் சிரத்தையுடன் பணியாற்றிய கட்டிடக்கலை நிபுணர் துரைராஜா ( V.S.Thurairajah ) அவர்கள் யாழ்பாண நூலகத்தின் பதிவுகளாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை தொகுத்துள்ளார். பல அரிய படங்களும், வரைபடங்களும் தகவல்களும் அடங்கிய "The Jaffna Public Library Rises From Its Ashes" என்று பெயரிடப்பட்ட இப்புத்தகத்தின் சர்வதேச வெளியீட்டு நிகழ்ச்சி 2008.01.19 அன்று அவுஸ்ரேலியா சிட்ணி நகரில் நடைபெறவுள்ளது.
"The Jaffna Public Library Rises From Its Ashes" புத்தகத்தினை சென்னையில் உள்ள மித்ர வெளியீடு நிறுவனத்தினர் பதிப்பித்துள்ளனர். பல அரிய படங்களும், வரைபடங்களும் தகவல்களும் அடங்கிய இப்புத்தகம் கெட்டி அட்டையில் தரமான தயாரிப்பில் வந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் 243 இலக்க கடையில் உள்ள தற்பொழுது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
The Internatinal launch :
Strathfield Town Hall, 65, Homebush Road, Strathfield
Order your book, Please contact :
Dr.Pon Anura - 0438103307
V.S.Thurairajah - 97449599
2008 புத்தகத்திருவிழா - அகநி
பெண்வெளியில் புதிய அலையென எழும் பெண் எழுத்தின் பதிவாக சமூகம், கலை, இலக்கியம், பெண்ணியம் என சிந்தனைத்தளத்தில் மீள்சிந்தனைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரைகள்.
எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : அகநி வெளியீடு